இராமநாதபுரம் மக்கள் நல்வாழ்வு இயக்க கூட்டமைப்பு சார்பில் இராமநாதபுரம் நகரின் சில பகுதிகளில் வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் என்ற கோசத்துடன் அண்ணா நகர், காந்திநகர் மற்றும் கமராஜர் நகர் ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று மரக்கன்று வழங்கி மரம் வளர்ப்பதின் அவசியம் குறித்து விளக்கி , பசுமையை உருவாக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி மரக்கன்றுகளை நட்டனர்.
இந்நிகழ்வில் திமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் கே.ஜே. பிரவின், மக்கள் நல்வாழ்வு இயக்க நிர்வாகி சாந்தகுமார், அண்ணாநகர் தர்மதுரை, ஹரி பிரசாத், ராம்குமார், விக்னேஸ், காந்திநகர் முன்னாள் வார்டு உறுப்பினர் இராமநாதன், முதுநாள் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் நகர் முழுவதும் இத்திட்டத்தினை கொண்டு செல்ல அடுத்தகட்டமாக முயற்சித்து வருவதாக பிரவின், சாந்தக்குமார் ஆகியோர் தெரிவித்தனர். இம் முயற்சிக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print














