உசிலம்பட்டி அருகே சாலை ஓரங்களில் மூவாயிரத்திற்கும் மேற்ப்பட்ட பனை விதைகள் நடும் நிகழ்ச்சி…

தமிழகத்தை பசுமைச் சோலையாக மாற்றும் முயற்ச்சியில் அரசு பல்வேறு தனியார் அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் முயன்று வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வின்னகுடி கிராமத்தில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பண்பாளன் சொந்த முயற்ச்சியில் வின்னகுடி கிராமத்திலிருந்து பாப்பாபட்டி இணைப்புச் சாலை வரை சுமார் 2 கி.மீ துராத்திற்கு பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் செல்லம்பட்டி யூனியன் தலைவர் கவிதா ராஜா தலைமையில் முத்துக்கு முத்தாக-கடைக்குட்டி சிங்கம்-டிஎஸ்பி படங்களில் நடித்த திரைப்பட நடிகர் வீரசமர் பனை விதைகளை நட்டு வைத்தார்.இந்நிகழ்ச்சியில் சுமார் 2 கி.மீ தூரம் வரை 3ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட பனை விதைகள் நடப்பட்டன.இந்நிகழ்ச்சியில் செல்லம்பட்டி யூனியன் அலுவலக அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!