மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பி.கே.மூக்கையாத்தேவர் கல்வி அறக்கட்டளையின் போட்டி தேர்வுகளுக்கு மாணவ மாணவிகள் இலவசமாக பயின்று வருகின்றனர். போட்டி தேர்வுகளில் மாணவ மாணவிகள் காவலர் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு நடைபெற்ற காவலர் தேர்வில் இலவச பயிற்சி மையத்தில் பயின்ற உசிலம்பட்டி கிராமப்புற மாணவர்களான லட்சுமணன், குணால், தனிக்கொடி, அஜித்குமார், விஜய், சிவன்ராஜ் என்ற 6 பேர் தேர்வாகியுள்ளனர்., காவலர் தேர்வில் தேர்வாகி காவலராகியுள்ள 6 மாணவர்களுக்கு பாராட்டு விழா அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்றது.பி கே எம் அறக்கட்டளை தலைவர் மதுசூதனன், செயலாளர் லெனின் சிவா, பொருளாளர் பிரபாகரன், முன்னாள் தலைவர் புலவர் சின்னன் முன்னிலையில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி.அய்யப்பன், எம் எல் ஏ கலந்து கொண்டு காவலர்களாக தேர்வு பெற்ற மாணவர்களுக்கு பாராட்டி பரிசுகளை வழங்கினார்.விழாவில் அதிமுக ஓ பி எஸ் அணி நிர்வாகிகள் ஜான்சன், பிரபு, சசிகுமார், அழகுமாரி, வேங்கை மார்பன் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
உசிலை மோகன்
You must be logged in to post a comment.