திருவாடானை பிடாரி அம்மன் கோவில் பூக்குழி உற்சவ விழா

திருவாடானை பிடாரி அம்மன் கோவில் பூக்குழி உற்சவ விழா அதிவிமரிசையாக நடந்தது..!

ராமநாதபுரம் மாவட்டம்  திருவாடானையில் இராமநாதபுரம தேவஸ்தானத்திற்கு உட்பட்ட ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி என்ற பிடாரி அம்மன் பூக்குழி உற்சவ விழாவையொட்டி கிடந்த ஏப்ரல் 28 தேதி கொடியேற்றதலுடன் விழா துவங்கியது. அன்றிலிருந்து பக்தர்கள் விரதம் இருந்து மது குடம் தலையில் ஏந்தி மீதி உலா வந்தனர் முன்னதாக கோவில் பூசாரி மற்றும் பக்தர் கையில் தீச்சட்டி உடன் வீதி உலா வந்தனர்.

இன்று காலை பெரிய கோவில் முன்பு உள்ள 6 மண்டகப்படி மண்டபத்தில் பக்தர் பால்குடம் எடுத்தும், பெரிய வேல் குத்தியும் வீதி உலா வந்து கோவில் முன்பு அமைக்கப் பட்டிருந்த பூக்குழியில் இறங்கி நேற்றிக்கடன் செலுத்தினர். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருள் பெற்றுச் சென்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!