அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவர், 5 ஆயிரம் மைல் கடந்து சென்று சூரிய கிரகணத்தைப் படம் பிடித்துள்ள சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.இது பற்றிய விபரம் வருமாறு -அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு பிசி மேகசின் (PC Magazine) என்ற வெப்சைட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இது, தனது வெப்சைட்டில் லேப்டாப், ஸ்மார்ட்போன், டிவி, சாஃப்ட்வேர் போன்ற தொழில்நுட்பம் சார்ந்த தகவல்களை வெளியிட்டு வருகிறது.இந்த நிறுவனத்தின் புகைப்படக் கலைஞராக பணியாற்றி வருபவர் டானி ஹாஃப்மென். இவர், இயற்கை தொழில்நுட்பம் தொடர்பான புகைப்படங்களை, களத்திற்கே நேரடியாகச் சென்று பதிவுசெய்வதில் ஆா்வம் கொண்டவா்.
இந்நிலையில், கடந்த 2ம் தேதி ஏற்பட்ட சூரிய கிரகணத்தை, அது மிகத் துல்லியமாகத் தெரியும் வடமேற்கு அர்ஜென்டினா பகுதிக்கு சென்று பதிவுசெய்ய விரும்பினார். இதையடுத்து, நியூயார்க்கில் இருந்து 5 ஆயிரம் மைல் தொலைவில் உள்ள வடமேற்கு அர்ஜென்டினாவுக்கு தனது குழுவினருடன் புறப்பட்டார்.போகும் வழியில் இருந்த காடுகள், மலைகள் போன்ற இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள், அரியவகை வனவிலங்குகள், பறவையினங்கள் மக்களின் கலாச்சாரம் என கண்ணில் கண்ட அனைத்தையும் தனது
கேமராவுக்குள் சிறைப்பிடித்தார்.இதையடுத்து, அர்ஜென்டினாவில் உள்ள சன் ஜூவான் என்ற நகரைக் கடந்து சென்று, சூரிய கிரகணம் துல்லியமாகத் தெரியும் இடத்தை தேர்வுசெய்து கிரகணம் தொடங்குவதற்காக அங்கு காத்திருந்தனர். அவர்கள் எதிர்பார்த்தது போலவே, சூரியனை நோக்கி நிலவு மெல்ல வந்தது. தொடக்கத்தில், அரை சூரிய கிரகணம் தோன்றியது. சரியாக 15 நிமிடங்களில் முழு சூரிய கிரகணம் ஏற்பட ஆரம்பித்தது.
இதைப் பார்த்து பரவசமடைந்த பத்திரிகையாளர் டானி, தன்னிடமிருந்த சோனி DSC-RX1000 II என்ற கேமரா மூலம் தொலைவில் இருந்தபடியே ஒரு போட்டோ, ஜூம் செய்து ஒரு போட்டோ என வெவ்வேறு கோணங்களில் சூரிய கிரகணத்தை போட்டோ எடுத்தார். மேலும், ஐபோன் 7 ப்ளஸ் ஸ்மார்ட்போனில் சூரிய கிரகணத்தையும், அவர் இருந்த பகுதிக்கு அருகில் இருந்த மலைத்தொடரையும் ஒரு சேர பனோரமா போட்டோ எடுத்தார்.அவர் எடுத்துள்ள புகைப்படங்கள் மற்றும் சென்று வந்த பயணக் கட்டுரை பிசி மேகசின் வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு சூரிய கிரகணத்தைப் படம் பிடிக்க, புகைப்படக் கலைஞர் ஒருவர் 5 ஆயிரம் மைல் சென்ற சம்பவம், அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









