உன்னால் முடியும் மாணவிகளின் திறன் மேம்பாடு பயிற்சி நிகழ்ச்சியில் கேட்பாரற்று கிடந்த முன்னாள் முதல்வர் படம்…அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்…

திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் பள்ளி வளாகத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் உன்னால் முடியும் என்கிற மாணவிகளின் திறன் மேம்பாட்டு பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் KA.செங்கோட்டையன், தமிழக கால்நடை பராமரிப்புதுறை அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன், தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சு.குணசேகரன், உட்பட 5000-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்த பள்ளி வளாகத்தில் உள்ள விழா அரங்கு மேடையின் மேற்பகுதியில் இருந்த மாண்புமிகு அம்மாவின் படம் அகற்றப்பட்டு அந்த இடத்தில் முதலமைச்சர் இ.பி.எஸ் படம் ஒட்டப்பட்டுள்ளது, மேலும் பள்ளி மாணவர்களின் ஒளி விளக்காக விளங்கிய மாண்புமிகு அம்மாவின் திரு உருவ படம் கிழே படிக்கட்டுக்கு அடியில் தலைகீழாக வைக்கப்பட்டிருந்தது, இந்த விழாவில் மூச்சுக்கு ஒரு தடவை அம்மாவின் ஆட்சியை வழங்கி வருகிறோம் என்று கூறும் அமைச்சர்கள் – இவர்கள் மாண்புமிகு அம்மாவின் படத்தை கூட உரிய மரியாதையின்றி அந்த வளாகத்தில் பல இடங்கள் இருந்தும் அங்கே மாண்புமிகு அம்மாவின் படத்தை வைக்காமல் (சரியான இடத்தில்) இருந்தது மிகுந்த வேதனை அளித்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட மாணவிகள் இந்த காட்சியை பார்த்த அவன் ஒரு வித மன வேதனையோடு இறுக்கத்துடன் இருக்கைகளில் அமர்ந்திருந்ததை காண முடிந்தது. இனியாவது இது போன்ற அரசு பள்ளிகளில் நடைபெறும் விழாக்களில் இவற்றை எல்லாம் முறை படுத்த வேண்டும் என்பதே அதில் கலந்து கொண்ட அனைவரின் எதிர்ப்பார்ப்பாகும்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!