பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட நிர்வாகிகள் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருடன் சந்திப்பு…

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்ட தலைவர் மன்சூர் மற்றும் செயலாளர் இப்ராஹிம் ஆகியோர் இன்று 13/04/2020 மாவட்ட ஆட்சியரை சந்தித்தனர்.

மாவட்டத் தலைவர் மன்சூர் கூறுகையில், “சமூக வலைதளங்களில் திட்டமிட்டு முஸ்லிம்கள் மீது விசமத்தனமான பிரச்சாரங்களை பரப்பும் சமூக விரோதிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளோம்.

இது சம்பந்தமாக ஏற்கனவே பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக 4 வழக்குகள் பதியப் பட்டிருக்கும் நிலையில் மீண்டும் இம்மாதிரியான பிரச்சாரங்கள் தொடர்ந்த வண்ணமாக உள்ளது ஆகையால் இதன் மீது மேல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளோம்.

இதுபோன்று விஷமப் பிரச்சாரங்களால் முஸ்லிம்களில் யாரேனும் நோய்வாய்பட்டு இராமநாதபுரம் தனியார் மருத்துவமனைக்கு செல்லும்போது அங்கு அவர்களை அலைக்கழிக்கும் சூழ்நிலையே நிலவுகிறது, இம்மாதிரியான நிலை மேலும் வராமலிருக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளோம்.

மேலும் பாப்புலர் ஃப்ரண்டின் அவசரகால பேரிடர் மீட்பு குழு எந்த நேரத்திலும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பணி செய்ய தயாராக உள்ளதை பதிவு செய்தோம். அனைத்தையும் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க உறுதி அளித்திருக்கின்றார்கள்.

இந்த சந்திப்பின் போது அலையன்ஸ் சோசியல் சர்வீஸ் நிறுவனர் ஹபிப் உடன் இருந்தார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!