மனித உரிமை மீறல்களுக்கு வித்திடும் தேசிய புலனாய்வு முகமை(NIA)க்கு வரம்பற்ற அதிகாரம் வழங்கியுள்ள மத்திய பா.ஜ.க அரசை கண்டித்தும், UAPA கருப்பு சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தியும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஒருங்கிணைப்பில் அனைத்து இயக்கங்கள் மற்றும் மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் பங்கேற்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் (27.07.2019) அன்று மாலை 04.00 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் எம்.முஹம்மது இஸ்மாயில் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் எம்.நாகூர் மீரான் வரவேற்புரையாற்றினார்.இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில தலைவர் தொல்.திருமாவளவன் MP, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் மு. வீர பாண்டியன், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச்செயலாளர் ஆ.ஹாலித் முகமது, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் மாநில இளைஞர் அணி செயலாளர் கோவை ஈஸ்வரன், இந்திய தவ்ஹீத் ஜமாத்
துணைத்தலைவர் முஹம்மது முனீர், திராவிடர் விடுதலை கழகம் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், தந்தை பெரியார் திராவிடர் கழகம் மாவட்ட செயலாளர் குமரன், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாநில தலைவர் கே.எம்.சரீஃப், மனித நேய ஜனநாயக கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் என்.ஏ. தைமிய்யா, தமிழ்தேச மக்கள் முன்னணி மாநில தலைவர் மீ.த பாண்டியன், தமிழ்ப் புலிகள் கட்சியின் மாநில தலைவர் நாகை திருவள்ளுவன், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில தலைவர் எல். அப்துர் ரஹ்மான், இளந்தமிழகம் ஒருங்கிணைப்பாளர் செந்தில், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில தலைவர்
சம்சுல் இக்பால் தாவூதி, நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் மாநில தலைவர் ஆசியா மர்யம், தமிழ்தேசிய விடுதலை இயக்கத்தை சேர்ந்த வே.பாரதி, சமூக ஆர்வலர் ஏ.கே.முஹம்மது ஹனீஃபா ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்கள்.பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் வட சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது ரபீக் ராஜா நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும்,பெண்களும் கலந்துகொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பி தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.
ஜெ.அஸ்கர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












