ஆர்எஸ் மங்கலம் அடுத்த மோர் பண்ணை கிராமத்தில் கிராம செயலாளர் உடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக 15 குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக மாவட்ட ஆட்சியரிடம் மனு:
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலம் தாலுகா மோர் பண்ணை மீனவ கிராமத்தில் கிராம செயலாளர் உடன் ஏற்பட்ட தகராறு காரணமாக 50 நாட்களுக்கு மேலாக 15 குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக பாதிக்கப்பட்ட மக்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலம் தாலுகா உப்பூர் அடுத்த மோர பண்ணை மீனவ கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்கு வசிக்கைம் மக்கள் மீன்பிடி தொழில் பிரதான தொழிலாக செந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட கிராம செயலாளர் சேது ராஜாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தனுஷ், அகிலேஷ், முத்துச்செல்வம் ஆகியோர் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து புகார் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் கிராமச் செயலாளரின் அதிகாரத்தை பயன்படுத்தி மோர் பண்ணை கிராம தலைவர் 50 நாட்களுக்கு மேலாக 15 குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்க வைத்து அவர்கள் யாரும் கிராமத்தில் நடக்கும் சுப நிகழ்ச்சி மற்றும் இறப்பு நிகழ்வில் கலந்து கொள்ளக்கூடாது, அதேபோல் அவர்கள் பிடித்து வரும் மீன்களை விற்க விடாமல் தடுத்து வருவதாக ஊரை விட்டு ஒதுங்கி வைத்ததாக சொல்லப்படும் மக்கள் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் திருவாடாணை காவல்துறை உதவி கண்காணிப்பாளர் ஆகியவரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர்.
புகார் தொடர்பாக இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டதாக சொல்லப்படும் மக்கள் இன்று மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து ஊரில் நடக்கும் திருவிழா மற்றும் அனைத்து நிகழ்வுகளும் கலந்து கொள்ள அனுமதிதது அனைவரும் சேர்ந்து வாழ நடவடிக்கை எடுக்குமாறு மனு அளித்துள்ளனர்.
மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததாக மனு அளித்தவர் தெரிவித்துள்ளனர்.