ராமநாதபுரம் மாவட்டம் திரு உத்திரகோசமங்கையை அடுத்த கடம்பன்குடி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருவதாகவும் இந்த கிராமத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை எனவும் அதுமட்டுமல்லாது தங்களது கிராமத்தில் உயிரிழந்த நபர்களை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல மயான சாலை வசதி இல்லாததால் தனியார் வயல்களுக்குள் தூக்கிச் செல்ல வேண்டிய அவல நிலை இருப்பதாகவும் குறிப்பாக தற்போது விவசாயக் காலம் இறுதி கட்டத்தை எட்டி பயிர்கள் விளைந்து முற்றி அறுவடைக்கு தயாராக இருக்கும் நிலையில் அந்த வயல்களுக்குள் பிணத்தை தூக்கிச் செல்ல வேண்டிய அவல நிலை இருப்பதாகவும் 100 நாள் வேலை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை தங்களுக்கு செய்து தர வேண்டும் என கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோனிடம் புகார் மனு அளித்துள்ளனர்.



You must be logged in to post a comment.