கீழக்கரை உசைனியா மஹாலில். நேற்று (01-01-2018) அனைத்து அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் சங்கங்கள் சார்பாக சமீபத்தில் கீழக்கரை வார்டுகள் மறுவரையறையில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் சம்பந்தமாக கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் ஆட்சியரிடம் புகார் மனு அளிப்பது என முடிவெடுக்கப்பட்டு, இன்று (02-01-2018) காலை இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கிழக்கு தெரு ஜமாஅத் துணைப்பொருளாளர் முகம்மது அஜீகர், மக்கள் டீம் அப்துல் காதர், இந்தியா தவ்ஜீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்ட துணைத்தலைவர் ஜாபீர் சுலைமான், மனித நேய மக்கள் கட்சி நகர் தலைவர் பாதுஷா, பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா நகர் தலைவர் முஃபீஸ் முஃபஸ்ஸல், S D P I கட்சியின் நகர் தலைவர் செய்யது அஸ்ரப், நகர் துணைத்தலைவர் அப்துல் காதர், செயல் வீரர் சித்தீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர் செயலாளர் ஹமீது யூசுப், இசுலாமிய ஜனநாயக பேரவை நகர் துணை அமைப்பாளர் நெய்னா முகம்மது, மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தின் செயலாளர் முகைதீன் இப்ராகீம், பொருளாளரும் கீழக்கரை சட்ட போராளிகள் தளத்தின் ஒருங்கிணைப்பாளருமான முகம்மது சாலிஹ் ஹூசைன், இஸ்லாமிய கல்வி சங்கத்தின் பொருளாளர்கள் முகம்மது அப்துல் காதர், சேகு ஜலாலுதீன், சமூக ஆர்வலர்கள் செய்யது அகமது கபீர், வாசீம் ஆகியோர் நேரில் சென்று மனு அளித்தனர். இவர்களுடன் சமூக ஆர்வம் நிறைந்த பலரும் கலந்து கொண்டனர்.
இதுசம்பந்தமான சமூக அமைப்பு நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களின் கருத்து தொகுப்பு வீடியோவாக விரைவில் வெளியிடப்படும்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print













One thought on “கீழக்கரை பொதுமக்கள் நலன் கருதி வார்டுகள் மறுவரையறை சம்பந்தமாக சீராய்வு செய்ய ஆட்சியரிடம் மனு – மக்கள் கருத்துக்கள் வீடியோவாக விரைவில்…”
Comments are closed.