இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ரயில்வே கோரிக்கைகளை நிறைவேற்ற ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி ஒன்றிய மந்திரியிடம் மனு..

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ரயில்வே கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி சந்தித்து முறையீடு..

இது குறித்து ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவிடம், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி அளித்த கடிதத்தில் தெரிவித்திருந்ததாவது:

சென்னை – தூத்துக்குடிக்கு மானாமதுரை -அபிராமம், பார்த்திபனூர், கமுதி சாயல்குடி வழியாக தூத்துக்குடி வரை புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும்.


காரைக்கால் – தூத்துக்குடி வரை கிழக்கு கடற்கரை சாலை வழியாக திட்டமிடப்பட்ட ரயில்வே வழித்தட திட்டத்தை மீண்டும் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை-ராமேஸ்வரம் இரு மார்க்கத்திலும் திருச்சி, விருத்தாசலம் வழியாக பகல் நேர விரைவு வண்டி, தினசரி இன்டர்சிட்டி வகை ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமேஸ்வரம்- மதுரை பயணிகள் ரயிலை தினமும் மூன்று முறை இயக்க வேண்டும். ராமேஸ்வரம்- கன்னியாகுமரி (22621/22622) ரயில்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அகல ரயில் பாதை போக்குவரத்திற்கு முன் மீட்டர்கேஜ் பாதையில் இயங்கிய ரயில்களை மீண்டும் இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இராமேஸ்வரம்- கோயம்புத்தூர், மதுரை, பழநி, பொள்ளாச்சி வழி, ராமேஸ்வரம் – பாலக்காடு பயணிகள் ரயில், ராமேஸ்வரம் – திருச்சி இரவு நேர பயணிகள் ரயில்களை மீண்டும் இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை – ராமேஸ்வரம், ராமேஸ்வரம் – திருப்பதி அந்தியோதயா விரைவு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருவனந்தபுரம் – மதுரை புனலூர் – பாலக்காடு விரைவு ரயில்களை ராமேஸ்வரம் வரை நீட்டிக்க வேண்டும். வாரம் மூன்று முறை இயக்கப்படும் இராமேஸ்வரம் திருப்பதி (16779/16780) விரைவு ரயிலை தினமும் இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இராமேஸ்வரம் – ஓகா (16733/16734) வாராந்திர
விரைவு ரயிலை வாரம் மூன்று முறை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .ராமேஸ்வரத்திற்கு இயக்கப்படும் வட மாநில ரயில்களை மதுரை வழியாக இயக்க வேண்டும்.

இராமநாதபுரம், பரமக்குடி, மண்டபம், நரிக்குடி, திருச்சுழி ரயில் நிலையங்களில் கால அட்டவணையில் தெரிவித்த ரயில்கள் நின்று செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலம்பு விரைவு ரயில் (16181/16182) நரிக்குடி (அ) திருச்சுழி, இராமேஸ்வரம் – திருச்சி பயணிகள் ரயில் சூடியூர், சத்திரக்குடி, வாலாந்தரவை, மண்டபம் முகாம்,கன்னியாகுமரி – இராமேஸ்வரம் அதிவிரைவு ரயில் மண்டபம், பரமக்குடி,  இராமேஸ்வரம் – அஜ்மீர் (20973/20974), இராமேஸ்வரம் – அயோத்தியா (22613/22614)
அதிவிரைவு ரயில்கள் இராமநாதபுரம், பரமக்குடி,
இராமேஸ்வரம் – பனாரஸ் (22535/22536) அதிவிரைவு ரயில் இராமநாதபுரம், இராமேஸ்வரம்- புவனேஸ்வர் (20895/20896) அதிவிரைவு ரயில் அனக்காப்பள்ளி ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மீட்டர் கேஜ் பாதையில்  கடந்த 1992 வரை செயல்பாட்டில் இருந்து அகல ரயில் பாதை மாற்றத்தின் போது அகற்றப்பட்ட  தங்கச்சிமடம் ரயில் நிலையத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.
பாம்பன் ரயில் புதிய பாலத்திற்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயரை சூட்ட  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரயில்வே அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை – ராமேஸ்வரம் இயக்கப்படும் ரயில் பெட்டிகளை மேம்படுத்திய புதிய பெட்டிகளாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை – அறந்தாங்கி வழியாக காரைக்குடிக்கு விரைவு ரயில் இயக்க வேண்டும், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, வழியாக கரைக்குடிக்கு ரயில் வழித்தடம் மின்மயமாக்கல் திட்டத்தை துரிதப்படுத்த வேண்டும்.

திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி பட்டுக்கோட்டை அறந்தாங்கி காரைக்குடி வழியாக மதுரைக்கு தினசரி ரயில்கள் இயக்க வேண்டும் .
காரைக்குடி – மயிலாடுதுறை நேரடி ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை வழியாக எழும்பூருக்கு தினமும் ரயில் இயக்க வேண்டும்.  சென்னை – காரைக்குடி பல்லவன் விரைவு ரயிலை அறந்தாங்கி வரை நீட்டிக்க வேண்டும் (அ) காரைக்குடி – அறந்தாங்கி வரை இணைப்பு ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அறந்தாங்கி வழியாக திருவாரூர், காரைக்குடி ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் ரயில்களை இயக்க வேண்டும். அறந்தாங்கியில் சரக்கு ரயில் தளம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை சமர்ப்பித்தார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!