இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா ஆ. புனவாசல் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி பத்ரகாளி. இவரை வீட்டு வேலைக்காக ஏஜன்ட்கள் கொக்கா டி இருளாண்டி, திருச்சி நாசர் ஆகியோர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மஸ்கட் நாட்டிற்கு அனுப்பினர்.
அங்கு பத்ரகாளி தொடர் சித்ரவதையால் தற்போது மிகவும் உடல் நலம் பாதித்துள்ளார். இதனால் பத்ரகாளியை மீட்டு தாயகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது மகள் நபியா மக்கள் குறை தீர் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோனிடம் கண்ணீர் மல்க இன்று கோரிக்கை மனு அளித்தார்
You must be logged in to post a comment.