கீழக்கரை நகரின் மிக முக்கிய பிரதான சாலைகளில் ஒன்றான பட்டாணியப்பா பகுதியில் நீண்ட காலமாக சாலை அமைக்காமல் இருப்பதினால் அந்த பாதையை பயன்படுத்தி வரும் பொது மக்களுக்கும் பள்ளி சென்று வருகின்ற ஏராளமான மாணவர்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் மிகவும் சிரமமாக இருப்பதுடன் குண்டும் குழியுமாகவும் அந்த சாலை முழுவதிலும் மேற்பரப்பில் கிடக்கின்ற கற்களால் குழந்தைகள் முதியவர்கள் கற்களால் தடுக்கி விழுந்து காயம் அடையும் சூழலும் வாகனங்கள் கட்டுப்பாடின்றி விபத்துகளும் ஏற்படுகிறது.
மேலும் மழைக்காலங்களில் மிகப் பெரும் அளவில் நீரும் தேங்கி நின்று நடப்பது கூட பாதை இல்லாத அளவிற்கு மிகவும் மோசமான நிலை இருந்து வருகின்றது எனவே நகராட்சி நிர்வாகம் மிக விரைந்து பட்டாணியப்பா பகுதியில் தரமான முறையில் சாலை அமைத்திட வேண்டும் என்று கீழக்கரை நகர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இம்மனு நகரச் செயலாளர் ஹிதாயத்துல்லாஹ் தலைமையில் மாநில துணைச் செயலாளர் பீ.முகமது இஸ்மாயில் மாவட்ட துணைச் செயலாளர் மு.நெய்னா அசாருதீன் வழிகாட்டுதலில் நகர் சிறுத்தைகள் ர. சீனி முஹம்மது காசிம், சு.ஜகுபர் மற்றும் மு.செய்யது சபீர் அலி ஆகியோர் முன்னிலையில் பட்டாணியப்பா பகுதியில் விரைந்து தரமான சாலை அமைத்திட கோரி ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் மற்றும் நகர் மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா மற்றும் நகர் மன்ற துணைத் தலைவர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான் ஆகியோரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது..


Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












