ராமேஸ்வரத்தில் புதிய ஆட்டோ பர்மிட் வழங்குவதை நிறுத்த கோரி கலெக்டரிடம் முறையீடு..

ராமநாதபுரம், செப்.26-

ராமேஸ்வரம் தீவுக்குள் புதிய ஆட்டோ பர்மிட் வழங்குவதை நிறுத்த வேண்டும் என ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் மனு அளித்து ஆட்டோ தொழிலாளர்கள் முறையிட்டனர்.

ராமேஸ்வரம் தீவுக்குள் இயங்கும் ஆட்டோக்களில் பெரும்பாலான வாகனங்கள் டீசல், பெட்ரோல் மூலம் இயங்குபவை. இவற்றை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் எரிவாயுவில் இயங்கும் ஆட்டோக்களாக மாற்றுவதற்கு ஆட்டோ சங்கங்கள் முடிவு செய்ய வேண்டும். அதற்கு எவ்வளவு கால அவகாசம் தேவை என்பதை அனைத்து சங்கங்களுக்கும் ஒன்று கூடி கலந்தாலோசித்து நாளை உத்திரவாதம் அளிக்க வேண்டும், சங்கங்கள் கொடுக்கும் உத்திரவாத அடிப்படையில்  எரிவாயுவில் இயங்கும் ஆட்டோக்களாக மாற்றிக் கொள்ளும் பட்சத்தில் ராமேஸ்வரம் தீவுக்குள் புதிய பெர்மிட் வழங்குவதை நிறுத்துவதாக கலெக்டர் கூறினார். ராமேஸ்வரம் நகராட்சி சேர்மன் நாசர்கான், கவுன்சிலர் சத்தியமூர்த்தி,  ஏஐடியுசி மீனவத் தொழிளார் சங்க மாநில செயலர் சி.ஆர்.செந்தில்வேல், இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி , சிஐடியு மாவட்ட துணை தலைவர் என்.பி.செந்தில்,  ஏஐடியுசி மாவட்ட பொது செயலாளர் ராஜன், ஏஐடியுசி ஆட்டோ சங்க நிர்வாகிகள் சண்முகராஜன், எம்.செந்தில், ஜீவானந்தம், பாண்டி,  சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் கருணாமூர்த்தி , ராமசந்திர பாபு, நாம் தமிழர் ஆட்டோ சங்க நிர்வாகி ராசு, அனைத்து ஆட்டோ சங்க நிர்வாகிகள் வடிவேல் கோட்டைசாமி, மணிகண்டன், பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!