அதிமுக மாநாட்டில் திமுக தலைவர்களை தவறான விமர்சனம் செய்து பேசிய அதிமுக பாடகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே. ஜெயபாலன் தலைமையில் தென்காசி மாவட்ட எஸ்.பி யிடம் புகார் அளிக்கப்பட்டது. மதுரையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அதிமுக மாநாட்டில், திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின், இளைஞரணி செயலாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. ஆகியோரை தவறாக விமர்சித்து அதிமுக பாடகர் பேசினார். இந்நிலையில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக மகளிரணி சார்பில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சனிடம், அவதூறு பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட பொறுப்பாளர் வே. ஜெயபாலன் தலைமையில் மகளிரணி நிர்வாகிகள் புகார் மனுவினை அளித்தனர்.

இதில் தென்காசி நகர செயலாளரும், நகர்மன்ற தலைவருமான சாதிர், செயற்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி, ஒன்றிய செயலாளர் அழகு சுந்தரம், துணை செயலாளர் கென்னடி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஜெ.கே. ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் ராஜேஸ்வரன், யூனியன் சேர்மன் சேக் அப்துல்லா, துணை சேர்மன் கனகராஜ் முத்து பாண்டியன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணராஜா, பேரூர் செயலாளர் சுடலை, ராஜராஜன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சங்கீதா சுதாகர், தலைவர் பேபி ரஜப் பாத்திமா, துணை அமைப்பாளர்கள் தர்மசெல்வி, சரஸ்வதி பாஸ்கரன்,மாரியம்மாள், பானுஷமீம், கற்பக செல்வி, மாவட்ட தொண்டரணி தலைவர் ராஜேஸ்வரி, துணைத் தலைவர் மாரிச்செல்வி, துணை அமைப்பாளர்கள் சபர்நிஷா, விமலா, லட்சுமி, சமூக வலை தள பொறுப்பாளர்கள் ஹபீப்நிஷா, சாலிமேரி மற்றும் சாம்பவர் வடகரை மாறன், சுதன்ராஜா, ராம்ராஜ். மாரியப்பன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









