மதுரை தெற்கு தாலுகா திருப்பரங்குன்றம் ஒன்றியத்தில் உள்ள பாரபத்தி கிராமத்தில் அருந்ததியர் மக்கள் சுமார் 70 ஆண்டுகளாக 130 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றோம்.
இங்கே 650 பேருக்கு மேல் இருக்கிறோம் மேலும் தற்போது ஒரு வாரத்திற்கு முன் எங்கள் பகுதி ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள் எங்கள் பகுதியின் அருகே உள்ள காலி இடத்தில் சிமெண்ட் தளம் அமைத்து தருவதாக எங்கள் பகுதி மக்களிடம் கேட்டுக் கொண்டதற்கு எங்கள் எங்கள் பகுதி பொதுமக்கள் அனைவரும் சமுதாய கூடம் அமைத்து தர வேண்டி ஒன்று கூடி பேசி எங்கள் பகுதி எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை எனவே பொதுமக்கள் அனைவரும் மிகச் சிரமப்பட்டு வருகிறோம் மேலும் பொதுமக்கள் பயன்படும் வகையில் இங்கு சமுதாயம் கூடம் கட்ட தங்கள் வலிவகை செய்ய வேண்டும் என்று திருப்பரங்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு வழங்கினர் .
மேலும் எங்கள் பகுதியில் சமுதாயக்கூடம் வைத்தால் விழா காலங்களில் எங்களுக்கு மிக பெரிய உதவியாக இருக்கும் ஆகவவட்டார வளர்சி அலுவலர் எங்கள் சமுதாய மக்கள் நலம் கருதி சமுதாயக் கூடம் அமைக்க வழிவகை செய்ய வேண்டும் என தெரிவித்தனர் மேலும் 10 பெண்கள உள்பட 40 போ மதுரை திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளித்தனர்.
செய்தியாளர் வி காளமேகம்


You must be logged in to post a comment.