எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி கீழக்கரை சமூக நல அமைப்புகள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு…

சில தினங்களுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த எச்.ராஜா கீழக்கரையை சார்ந்த மக்களை தீவிரவாத்த்துடன் தொடர்புபடுத்தி அவதூறாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேட்டியளித்தார்ம.  இது தொடர்பாக பல் வேறு கண்டனங்கள் எழும்பிய நிலையில் பல்வேறு அமைப்புகள் எச்.ராஜா மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்த வண்ணம் உள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக இன்று (22/05/2019) கீழக்கரையில் உள்ள மஜ்மா உல் ஹைராத்தியா அறக்கட்டளை, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, வடக்கு தெரு சமூக நல அமைப்பு (NASA) , மக்கள் டீம், வீர குல தமிழர் படை, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்தியன் தவ்ஹீத் ஜமாத், மக்கள் நல பாதுகாப்பு கழகம், SDPI கட்சி, இஸ்லாமிய கல்வி சங்கம், நாம் தமிழர் கட்சி, சட்ட விழிப்புணர்வு இயக்கம் மற்றும் பொதுமக்கள் இணைந்து காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனாவை சந்தித்து எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க கூறி புகார் மனு அளித்தனர்.

மேலும் ஓம் பிரகாஷ் மீனா கூறுகையில், தன்னுடைய இரண்டு வருட கால பணியில், கீழக்கரை மக்கள் சகோதரத்துவத்துடன் இருப்பதை நான் பார்த்து வருகிறேன். மேலும் அது போன்ற விமர்சனங்கள் மிகவும் வேதனையளிக்க கூடிய விசயமாகும்.  நிச்சயமாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!