ஏர்வாடி, சிக்கல் பகுதிகளுக்கு காவிரி குடிநீர் வழங்க கோரி ஆட்சியருக்கு மகளிர் மன்றம் மனு..

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் சிக்கல் ஊராட்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோம் வசித்து வருகின்றனர். சிக்கல் குடிநீரேற்று நிலையத்தில் இருந்து ஏர்வாடி, மேல சிறு போது, கீழ சிறு போது, காமாட்சிபுரம், ஆயக்குடி, கழநீர் மங்கலம், இதம் பாடல், அடஞ்சேரி, தொட்டியபட்டி, பொட்டல்பச்சேரி, பண்ணந்தை, கீரந்தை, கோழிகுளம், புத்தேந்தல், சிக்கல், மேல பனையூர், சிறைக்குளம், மறவாய்க்குடி, மத்தியல், மதீனா நகர், காமராஜபுரம் குடியிருப்பு, சிவலிங்கபுரம், ஆண்டிச்சிகுளம், பேய்க்குளம், வள்ளக்குளம், சொக்கானை, பனிவாசல், அன்மேனி, மறவாய்க்குடி உள்பட 52 கிராமங்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. பரமக்குடி, கடலாடி, முதுகுளத்தூர் வழியாக பல கி.மீ., தூரம் தண்ணீர் சுற்றி வரும் பாதையில் குழாய்களில் ஆங்காங்கே உடைப்பு ஏற்படுகிறது. இதனால் சிக்கல் கிராமத்திற்கு தண்ணீர் வந்து சேருவதில்லை.

எனவே, கீழக்கரை, மாயா குளம், ஏர்வாடி வழியாக சிக்கல் நீரேற்றும் நிலையத்திற்கு தண்ணீர் வழங்கினால் அன்றாட பயன்பாட்டிற்கு தண்ணீர் பிரச்னையை தீர்க்க இயலும். இதர பகுதிகளுக்கு தண்ணீர் பிரச்னையை தீர்க்க துரித நடவடிக்கை எடுப்பது போல், சிறப்பு முன்னுரிமை அளித்து சிக்கல் கிராம தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிற்கு சிக்கல் பகுதி மகளிர் மன்றங்கள், ஜனநாயக மாதர் சங்க நிர்வாகிகள் அளித்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!