நெல்லையில் வணிகர் சங்க பேரமைப்பினர் அறநிலையத்துறை அமைச்சரை சந்தித்து மனு..

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலை சுற்றியுள்ள கடைகளை உடனடியாக அகற்ற மாநகராட்சியின் சார்பில் நேற்று நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

இதனை தடுக்ககோரி உடனடியாக இன்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் A.M.விக்கிரமராஜா, துணைத்தலைவர் T.P.V.வைகுண்டராஜா, பொருளாளர் M.சதக்கத்துல்லா, திருநெல்வேலி மாநகர தலைவர் M.R.குணசேகரன், நெல்லை மத்திய மண்டல செயலாளர் விநாயகம் ஆகியோர் தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் S.ராமசந்திரன் சந்தித்து மனு அளித்தனர்.

பேரமைப்பின் கோரிக்கையை உடனடியாக ஏற்று அமைச்சர் அவர்கள் வணிகர்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும் என உறுதியளித்தார். மேலும் மாற்று இடம் வழங்கப்படும் வரை வணிகர்கள் தங்கள் கடைகளில் வணிகம் செய்துகொள்ளவும் அனுமதி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!