முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 16.10.18 அன்று காலை 9.30 மணியளவில் வணிகவியல் மற்றும் கணினிபயன்பாட்டியியல் துறை சார்பாக தனிநபர் ஆளுமை வளர்ச்சிகான கருத்தரங்கம் கல்லூரி கருத்தரங்கு மையத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வணிகவியல் மற்றும் கணினி பயன்பாட்டியியல் மாணவி பாத்திமா சிஃபானாவின் இறைவணக்கத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து கல்லூரி முதல்வர் டாக்டர். A.R. நாதிராபானு கமால் வரவேற்புரையாற்றி ஆளுமை வளர்ச்சி திறமைகளை பற்றியும், சிறப்பு விருந்தினர் தனி திறமைகளை பற்றியும் எடுத்துக்கூறி நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து கல்லூரி சார்பாக நினைவு பரிசு இரமநாதபுரம் அரசு மகளிர் கல்லூரி வணிகவியல் மற்றும் கணினி பயன்பாட்டியியல் துறைத்தலைவர் டாக்டர். ஜெனட் ஒய் செல்வியாவுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியினை தொடர்ந்து சிறப்புவிருந்தினர் டாக்டர் A.P.J. அப்துல்கலாமின் கூற்றுப்படி “தூங்கும் போது காண்பது அல்ல கனவு, நீங்கள் விழித்து இருக்கும் போது தூங்க விடாமல் செய்வது தான் கனவு” என்பதைப்பற்றியும், தாமஸ் ஆல்பா எடிசன் கூற்றுப்படி கடின உழைப்பு 99 சதவீதம் அவர் தோல்வியை சந்தித்தார். ஆனால் மீண்டும் முயற்சி செய்ததால் 100வது சதவீதம் வெற்றியை காண முடிந்தது எடுத்துக்காட்டாக கூறி, தனி மனிதனின் ஆளுமைகளை எடுத்துரைத்தார்.
இறுதியாக வணிகவியல் மற்றும் கணினி பயன்பாட்டியியல் மாணவி பாரிகா பர்வின் நன்றியுரை கூற இந்நிகழ்ச்சி இனிதே முடிவடைந்து.






You must be logged in to post a comment.