பெரியாரை பற்றி சர்ச்சை பேச்சு சீமான் பேசியது சரி தான்! ஆதாரம் நான் தருகிறேன்! பாஜக தலைவர் அண்ணாமலை..

பெரியார் பேசியதற்கான ஆதாரத்தை வெளியிடத் தயார் என்று சீமானுக்கு ஆதரவாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் பற்றி அவதூறாகப் பேசியதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

நேற்று(புதன்கிழமை) செய்தியாளர்களுடன் பேசிய சீமான், பெரியாருக்கும் சமூக சீர்திருத்தத்துக்கும் என்ன சம்மந்தம்? எனப் பேசியிருந்தார். அதைத் தொடர்ந்து இன்று, “பெரியார் என்ன சமூக சீர்திருத்தம் செய்தார்? பெரியாருக்கு கொள்கை என்ற ஒன்றே இல்லை. வள்ளலாரைத்தாண்டி பெரியார் என்ன சமூக சீர்திருத்தம் செய்துவிட்டார்?” என்று மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

இது பற்றி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அண்ணாமலை பதிலளித்து பேசியதாவது:

”பெரியார் பேசியதாக சீமான் கூறியதை எந்த புத்தகத்தில் பெரியார் எழுதியுள்ளார் என்பதற்கான ஆதாரத்தை நான் வெளியிடுகிறேன். சீமான் வீட்டுக்கு காவல் துறையினர் வந்தால் அந்த புத்தகத்தையும் அதற்கான நகலையும் காண்பித்தால் போதும்.

பெரியார் பேசியதை தற்போது பொதுவெளியில் கூற முடியாது. சீமான் பேசியது சரி என்று கூறவில்லை, பெரியார் பேசியிருக்கிறாரா என்று கேட்டால், பேசியிருக்கின்றார், அதற்கான ஆதாரங்களை வெளியிட நான் தயார்” என்று அண்ணாமலை தெரிவித்தார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!