பெரியப்பட்டிணம் ஊரில் கிட்டத்தட்ட 12ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள கப்பலாறு தடுப்பணையில் மழை நீர் கடலில் கலக்காத வண்ணம் சேமித்து வைக்கப்படுகிறது. இதனால் பெரியபட்டிடணத்தின் நிலத்தடி நீர் உயர ஏதுவாக உள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் சில நபர்களின் கைவரிசையால் தடுப்பணையின் கரை உடைக்கப்பட்டு அணையில் தேக்கி வைக்கப்பட்ட நீர் வெளியேறியது.
இதை அறிந்த உள்ளூர் இளைஞர்கள் 70பேருக்கு மேல் அவ்வூர் அரசு அதிகாரிகளின் நடவடிக்கை எடுக்கும் வரை தாமதிக்காமல் உடனே களத்தில் இறங்கி உடைப்பை அடைத்து சரி செய்தனர். இதனால் தேக்கி வைக்கப்பட்ட நீர் கடலில் கலந்து வீணாவது தடுக்கப்பட்டது.
இந்த இளைஞர்களின் தன்னலம் பாராத இச்செயலை அவ்வூர் மக்கள் வெகுவாக பாராட்டினார்கள். மேலும் இளைஞர்களின் செயல்பாடுகளையும், தடுப்பு உடைக்கப்பட்டதை பற்றியும் பல தினசரிகளில் செய்தியாகவும் வந்தது. இதன் எதிரொலியாக தடுப்பு அணை கட்டுவதற்கான ஆய்வுக்கு உடனடியாக அரசு அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டனர். இவ்வூர் இளைஞர்களின் செயல்பாடுகள் நிச்சயமாக பாராட்டுக்குரியது.. நாமும் சேர்ந்து வாழ்த்துவோம்.





You must be logged in to post a comment.