பெரிய பட்டினத்தில் புதிய நியாய விலை கடை திறப்பு விழா 

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் பெரியபட்டினம் ஊராட்சி தெற்கு புதுகுடியிருப்பு பகுதியில் 12,00,000 மதிப்பீட்டில் புதிய நியாயவிலை கடையை ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பெரிய பட்டினம் அங்கன்வாடி மையத்தையும் திறந்து வைத்து அங்கு பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்களிடம் குழந்தைகளின் விபரங்கள் மற்றும் உணவு வழங்கும் விபரங்களை கேட்டறிந்தார். மேலும் அருகாமையில் உள்ள பெரியபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று கட்டிடங்களை பார்வையிட்டு குழந்தைகளிடம் உரையாடினார் தமிழ்நாடு முதலமைச்சர் கொண்டுவந்த சிறப்பான திட்டங்களை எடுத்துரைத்தார். தமிழ்நாட்டில் அதிகமான பிள்ளைகள் அரசு பள்ளியில் சேர்வதற்கு கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பெரியபட்டினம் ஒன்றிய கவுன்சிலர் பைரோஸ் கான் , எஸ் டி பி ஐ கட்சியின் மாவட்ட தலைவர் ரியாஸ் கான்   , பெரியபட்டினம் ஊராட்சி மன்ற தலைவர்கள் உறுப்பினர்கள் மற்றும் திமுக மாவட்டம் மற்றும் நகர்  நிர்வாகிகள் உட்பட பட திரளாக கலந்து கொண்டனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!