பெரியபட்டினம் மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே பெரியபட்டினத்தில் மகான் செய்யதலி ஒலியுல்லாஹ் தர்காவில் 123 ஆம் ஆண்டு மதநல்லிணக்க சந்தனக்கூடு விழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழா ஜலால் ஜமால் ஜும்மா பள்ளிவாசல் திடலில் இருந்து குதிரைகள் நாட்டியமாட பச்சை வண்ண பிறை கொடி கொண்டு வான வேடிக்கைகளுடன் மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட ரதம் ஊர்வலமாக புறப்பட்டு மல்லிகை பூச்சரங்களால் அலங்கரிக்கப்பட்ட மகான் செய்யதலி ஒலியுல்லாஹ் தர்காவை வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து உலக நன்மைக்காக மவுலீது என்னும் (புகழ் மாலை) ஓதப்பட்டது. தொடர்ந்து அன்று முழுவதும் இரவு முதல் மறுநாள் வரை தொடர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.. அதிகாலை பள்ளிவாசலில் தொடங்கி சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு தர்காவில் புனித சந்தனம் பூசப்படும் தொடர்ந்து பகலில் சந்தனக்கூடு நிகழ்ச்சி நடைபெறுவதுடன் ஜூலை 3ல் கொடி இறக்கப்பட்டு விழா நிறைவடைகிறது. சந்தனக்கூடு விழா ஏற்பாடுகளை கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர். விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டு கண்டுகளித்தனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!