பிறந்து பத்துநாட்களே ஆன பெண்சிசு இறந்துவிட்டதாக மறைமுகமாக புதைக்கப்பட்ட சம்பவம், பெண்சிசு கொலையா? என புகார் அளித்தும் போலிசார் மெத்தனம் காட்டுவதாக மருத்துவர்கள் குற்றச்சாட்டு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடபட்டியைச் சேர்ந்த சூர்யபிரபா – முத்துப்பாண்டி தம்பதிகளுக்கு ஏற்கனவே இரு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் இவர்களுக்கு கடந்த பிப் – 6 ஆம் தேதி சேடபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூன்றாவதாகவும் பெண் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது.இந்த குழந்தைக்கு மூன்றாவது முறையாக தடுப்பூசி செலுத்துவதற்காக வீட்டிற்கு வந்த கிராம செவிலியர் மீனாட்சியிடம் பிப் – 15ஆம் தேதி உடல்நலக்குறைவால் பெண்சிசு இறந்துவிட்டதாக கூறி மறைமுகமாக வீட்டின் அருகே புதைத்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

சந்தேகமடைந்த செவிலியர் பெண்சிசுவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் கிராம செவிலியர் மீனாட்சி பெயரில், சேடபட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இந்த புகார் அளித்து பத்து நாட்களுக்கு மேல் ஆகியும் இந்த புகாரின் மீது போலிசார் முறையாக விசாரணை நடத்தாமல் மெத்தனம்காட்டி வருவதாக ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.இது குறித்து பேரையூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் மதியழகனிடம் கேட்ட போது, புகார் அளித்த செவிலியரே புகாரின் மீது எந்த நடவடிக்கையும் வேண்டாம் என கேட்டுக் கொண்டதால் புகாரின் மீது மேல் நடவடிக்கை எடுக்கவில்லை என மழுப்பலான பதிலே தெரிவித்தார்.இந்த விவகாரத்தில் போலிசார் தவறு செய்தனரா?, செவிலியர் தவறு செய்தாரா எனவும், பெண்சிசுவின் மர்ம மரணத்தின் மீதும் உயர் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!