கீழக்கரையில் முகக் கவசம் அணியாத நபர்களுக்கு நகராட்சி அபராதம்……..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இந்தியா முழுவதும் இரண்டாம் கட்ட கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் காரணத்தினால் தமிழக அரசு கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகிறது, அதே போல் முக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் வசூலிக்கப்படும் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன் அடிப்படையில் கீழக்கரை முக்கு ரோடு பகுதியில் கீழக்கரை நகராட்சி  ஆணையாளர் பொறுப்பு பூபதி தலைமையில் வட்டார வள மருத்துவ அதிகாரி டாக்டர் ராசிக்தீன் துப்புரவு மேற்பார்வையாளர் சக்திவேல் உள்ளிட்டோர் முகக் கவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 200 அபராதம் விதித்தனர்.

இதில் கீழக்கரை காவல் துறையினர், சுகாதார பணியாளர்கள் நகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!