பரவும் கொரோனா… அலட்சியம் காட்டும் பொதுமக்கள்… தர்ம சங்கடத்தில் கீழக்கரை காவல்துறையினர்…

உலகை அச்சுறுத்தி வரும் இரண்டாம் அலை தமிழகத்திலும் கோர முகத்தை காட்ட தொடங்கியுள்ளது.  இதை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்து வருகிறது.

தற்சமயம் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதிகளில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு கீழக்கரை நகராட்சி, சுகாதாரத்துறை, வருவாய்துறை மற்றும் காவல்துறையினர் இணைந்து ரூபாய் 200 அபராதம் விதித்து வந்தநிலையில். தற்சமயம் காவல்துறையை மட்டும் வைத்து முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க சொல்லி மற்ற துறையினர் கட்டாயப்படுத்துவதால் காவல்துறையினர் விரக்தியில் உள்ளனர்.

இதுபற்றி காவல்துறையினரிடம் விசாரித்த போது பெயர் கூறவிருப்பாத அதிகாரி ஒருவர்,  “எந்த பிரச்சணை என்றாலும் காவல்நிலையத்திற்க்கு தான் வருகின்றனர். தற்சமயம் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க சொல்லி கையில் நோட்டுடன் மக்களிடம் அபராதம் விதிப்பது ஏதோ கோவிலுக்கு நன்கொடை கேட்பது போல் உள்ளது. மேலும் காவல்நிலையத்தில் போதிய காவலர்கள் இல்லாமல் சிரமப்பட்டு வரும் வேலையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க எந்த துறையினரும் வராமல் நாங்கள் மட்டும் இப்பணியை செய்வது வேதனையாக உள்ளது என்றார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!