கீழக்கரை ப்யர்ல் மெட்ரிக் பள்ளயில் அறிவியல் கண்காட்சி – புகைப்பட தொகுப்பு…

இந்தியாவில் ஃபிப்ரவரி 28ம் தேதி தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது. அதையொட்டி கீழக்கரை ப்யர்ல் மெட்ரிக் பள்ளியில் இன்று (28-02-2018) பள்ளி வளாகத்தில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியில் அனைத்து வகுப்புகளில் இருந்தும் பல மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இக்காண்காட்சியில் மரம் வளர்த்தல், இயற்கை வளத்தை பேணுதல், பூகோள அமைப்பு, கோள்கள் அமைப்பு, விஞ்ஞான வளர்ச்சி, தகவல் தொடர்பு வளர்ச்சி, இயற்கையோடு இணைந்நு வாழ்தலின் அவசியம், உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு போன்ற செயல்பாடுகளை விளக்கும் வண்ணம் பள்ளி மாணவர்கள் தங்கள் படைப்புகளை பார்வைக்கு வைத்திருந்தனர்.

இக்கண்காட்சியில் பங்குபெற்ற மாணவர்களை, பள்ளி நிர்வாகம் ஊக்குவித்ததோடு வெகுவாக பாராட்டினர்.

புகைப்படத் தொகுப்பு 

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!