கீழக்கரையில் கடந்த ஜுன் மாதம் 22ம் தேதி மாலை 4 மணி முதல் மாபெரும் விளக்க பொதுக் கூட்டம் “ஈருலக வெற்றியை நோக்கி” என்ற தலைப்பில் நடைபெற்றது. இம்மாநாடு இஸ்லாமியா பள்ளி (கிஷ்கிந்தா) மைதானத்தில் மிக பிரமாண்டமாக, ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் திரளாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு குர்ஆன் வசனம் மற்றும் வரவேற்புரையுடன் தொடங்கியது. ஹாமிது அவர்கள் கிராஅத் ஓதி துவங்கி வைத்தார். ஃபஹத் வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சிகளை வடக்குத்தெரு சமூக நல அமைப்பின் செயலாளர் சட்டப் போராளி பர்ஹான் சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் கீழை அமைதி மற்றும் வழிகாட்டி மையம் சார்பாக கடந்த மாதம் கீழக்கரை நகரில் நடைபெற்ற குர்ஆன் மணணம் மற்றும் பேச்சுப் போட்டிகளில் சிறப்பாக செயலாற்றிய போட்டியாளர்களின் போட்டிகள் நடைபெற்றது. அதை தொடர்ந்து மௌலவி. அப்துர் ரஹ்மான் சதகி மார்க்க கல்வியின் அவசியத்தை பற்றி விளக்கவுரை நிகழ்த்தினார்.
இந்த மாநாட்டில் “மார்க்க கல்வியின் இன்றைய நிலையும் மாற்றத்திற்கான வழியும்” என்ற தலைப்பில் அஷ்ஷெய்க். அப்துல் மஜீத் மஹ்ளரி மற்றும் “மார்க்க கல்வியும் மறுமை வெற்றியும்” என்ற தலைப்பில் மௌலவி. அப்துல் பாசித் புஹாரி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் அஷ்ஷேய்க் முபாரக் மதனி பங்கேற்று சிறந்த வாழ்க்கைக்கு மார்க்க கல்வியின் அவசியம் பற்றி எடுத்துரைத்தார்.
மேலும் இந்நிகழ்வின் ஒரு பகுதியாக கீழை அமைதி மற்றும் வழிகாட்டி மையத்துடன் நல்லுறவுடன் ஒத்துழைப்பு வழங்கிய தமுமுக மாவட்ட பொறுப்பாளர் கீழை பாதுஷா, வடக்குத்தெரு சமூக நல அமைப்பின் (NASA) நிர்வாகி செய்யது அஹமது பஷீர், இஸ்லாமியா பள்ளியின் தாளாளர் முகைதீன் இப்ராகீம், அல் பையினா பள்ளியின் நிறுவனர் ரபி அஹமது, பழைய குத்பா பள்ளி ஜமாஅத் தலைவர் ஹாஜா முகைதீன், கீழை நியூஸ் நிர்வாக சட்ட இயக்குனரும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான சாலிஹ் ஹுசைன் போன்றோருக்கு நினைவு சிறப்பு கேடயங்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டார்கள்.
இந்த விழாவின் போது கீழை அமைதி மற்றும் வழிகாட்டி மையம் நடத்திய பல்வேறு இஸ்லாமிய திறனறிவு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கீழை அமைதி மற்றும் வழிகாட்டி மையத்தின் செயலாளர் அஹமது குழுவின் நோக்கத்தை விளக்கி கூறினார். நிகழ்ச்சியின் நிறைவாக அப்துல் வாஹித் நன்றியுரை கூறினார்.


Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print















