சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் உதவி ஆய்வாளராக பணி புரிந்து வருகிறார் சிவகுமார். இவர்காவல்துறையினருக்கு ஒரு சங்கம் வேண்டும் என்று பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வந்தார். அதற்காக அவர் பல இடையூறுகளையும் அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.இவருக்கு காவலர் சங்கம் என்ற பைத்தியம் முத்தி விட்டது என்றும் இவருக்கு மன நலம் பாதிக்கப்பட்டு விட்டது என்றும் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பினர் என்பதும் நடைபெற்ற நிகழ்வுகளில் ஒன்று. 1975ன் 27-வது சட்டம் பதிவு எண்.212/2001 தமிழ்நாடு காவல்துறை காவலர் சங்கம் என்ற பெயரில் முறையாக பதிவு செய்து காவலர்கள் சங்கத்தின் தலைவராக செயல்பட்டு வந்தார்,
அதன் பிறகு சுமார் 18 வருடங்களாக சங்கத்தின் அங்கீகாரம் கேட்டு கிட்டத்தட்ட இரண்டு மூன்று முறை டிஜிபி அவர்களையும் சந்தித்தார்.சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்து நடத்தி வருகிறார், தற்போது டெல்லி உச்ச நீதிமன்றத்திலும் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார், ஆனால் இவரது உயர் அதிகாரிகளும் சரி, தமிழக அரசும் சரி இவரது கூக்குரலை கேட்கவே இல்லை.எப்படியாவது இந்த சங்கத்தின் அங்கீகாரம் பெற்று காவல்துறையினருக்கு பக்க பலமாக செயல் படலாம் என பாடுபட்டு வந்தார். இந்நிலையில் இன்று 10.10.19அதிகாலை D-16 ஆயுதப்படை குடியிருப்பு புதுப்பேட்டை இல்லத்தில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அகால மரணமடைந்துள்ளார்.இவரின் மறைவு பல்வேறு காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print














