தந்தைக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி .! ஊருக்கே அறுசுவையுடன் உணவு வழங்கி மகிழ்ந்த பிள்ளைகள் .!!
ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே முத்துவயல் கிராமத்தில் கருப்பையா வேலம்மாள் இவர்களது மூத்த பிள்ளையான சாத்தையா இவர் கடந்த 50 ஆண்டு காலமாக திராவிட முன்னேற்றக் கழக தீவிர பற்றாளராக இருந்து வந்தது மட்டுமின்றி அப்பகுதி சுற்று வட்டார மக்களுக்கு உரிமைக்குரலாய் இருந்து வந்துள்ளார் அதுமட்டுமல்லாமல் பாட்டு பாடுவது, கும்மியாட்டம், ஒயிலாட்டம்,கற்றுத் தருவது போன்ற பன்முகத் திறமைக்கு சொந்தக்காரராக இருந்து வந்துள்ளார் இந்த நிலையில் அவரது முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலியை நினைவு கூறும் விதமாக போகலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் k.kகதிரவன், திமுக பிரமுகர் J.kதினேஷ்குமார் பிரியா, அதிமுக பிரமுகர் கலைச்செல்வம் ஆகியோர் தலைமையில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் முன்னாள் போகலூர் ஒன்றிய பெருந்தலைவர் சத்யா குணசேகரன், முத்துவயல் ஊராட்சி மன்ற தலைவர் ரவி ஆகியோர் முன்னிலையில் திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் அவரது புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர் பின்னர் அவரது பிள்ளைகளான மனோகரன், பேச்சியம்மாள் பிரபாகரன், ஷர்மிளாதேவி பிரபாகார்த்திகேயன், விஜயசாந்தி ஆகியோர் ஏற்பாட்டில் அறுசுவையுடன் கூடிய உணவுகளை அப்பகுதி சுற்றுவட்டார மக்களுக்கு வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினர் இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மனம் உருகி அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்



You must be logged in to post a comment.