நிலக்கோட்டை அருகேயுள்ள வாலாங்கோட்டையில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா..
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகேயுள்ள கூவனூத்து வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு உட்பட்ட வாலாங்கோட்டை கிராமத்தில் ரேஷன் கடை திறக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை நிறை வேற்றும் வகையில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உத்தரவின் பேரில்,
திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும், பழநி எம்எல்ஏவுமான ஐபி செந்தில்குமார் வழி காட்டுதலின் படி வாலாங்கோட்டையில் புதிய பகுதிநேர புதிய ரேஷன் கடை திறக்க உத்தரவிடப் பட்டது. அதன்படி நிலக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் கரிகாலபாண்டியன் பகுதிநேர ரேஷன் கடையை திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட் களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க செயலாளர் சாதிக் அலி, உதவி செயலாளர் சங்கரமூர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், கிளை செயலாளர் சுரேஷ், மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு துணை அமைப்பாளர் ஜான்போஸ்கோ, ஒன்றிய பொறுப்பாளர்கள் வேல்முருகன், செல்வம், பாலச்சந்திரன் நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் வடிவேல், ராதாகிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். கோரிக்கையை ஏற்று ரேஷன் கடை திறந்ததால் இப்பகுதி மக்கள் மகிழ்ச் சியடைந்தனர்.
You must be logged in to post a comment.