ராமநாதபுரம், நவ. 19-
ராமேஸ்வரம் அருகே வீடுகளில் வளர்த்து வனத்தறையினரிடம் ஒப்படைத்த 200 பச்சைக்கிளிகளை கலெக்ருடன் இணைந்து வனத்துறையினர் வனப்பகுதியில் பறக்கவிட்டனர். வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1972 ன் படி பச்சைக்கிளி, நீலப் பைங்கிளி, பஞ்சவர்ணம், புறா, வண்ணத்து சிட்டு, மைனா, கவுதாரி பனங்காடை உள்ளிட்ட வன உயிரினங்களை வளர்ப்பது சட்டப்படி குற்றம். பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் வன உயிரினங்களை கடந்த ஜூன் மாத இறுதிக்குள் ஒப்படைக்குமாறு வனத்துறை அறிவித்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வளர்த்த பச்சைக்கிளிகளை மாவட்ட வன அலுவலகம், வனச்சரகங்களில் ஒப்படைத்தனர். அவ்வாறு ஒப்படைத்த பச்சைக்கிளிகளின் சிறகுகள் வெட்டப்பட்டு பறக்க இயலாத நிலையில் இருந்ததால் 4 மாதங்களாக வனச்சரங்களில் பராமரிப்பால் சிறகுகள் வளர்ந்தன. இதைதொடர்ந்து, ராமேஸ்வரம் அருகே வனத்துறை கட்டுபாட்டில் உள்ள வனப்பகுதியில் ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் ஹேமலதா, மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் முன்னிலையில் 200 பச்சைக்கிளிகள் நல்ல முறையில் விடுவிக்கப்பட்டன.
இதற்கு முன், 20 கிளிகள் மாவட்ட வன அலுவலரால் பறக்க விடப்பட்டது. இது வரை 220 கிளிகள் பொதுமக்களிட மிருந்து பெறப்பட்டு நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் பச்சைக்கிளி, நீல பைங்கிளி, பஞ்சவர்ணக் கிளி, புறா, வண்ணச்சிட்டு, மைனா, கௌதாரி, பனங்காடை உள்ளிட்ட வன உயிரினங்களை தாமாகவே முன்வந்து வனச்சரங்களில் ஒப்படைக்குமாறு வனத்துறையினர் கேட்டுக்கொண்டனர்.
அவ்வாறு ஒப்படைக்க தவறும் பட்சத்தில் வனப்பணியாளர்கள் ரோந்து பணியின் போது கண்டுபிடிக்கப்பட்டால் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஒரே நேரத்தில் 200 பச்சைக் கிளிகள் பறக்க விடப்பட்டதை அப்பகுதி மக்கள், வன அதிகாரிகள் கண்டு மகிழ்ந்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









