சிறு குறு தொழிற்சாலைகள் & தொழிலாளர்களை அரசு காக்க வேண்டும்:-எச்.வசந்தகுமார் வேண்டுகோள்.

இன்று கண்ணுக்கு தெரியாதா இந்த வைரஸ் நோய் தொற்றினால் பயந்து வாழ்வாதாரத்தை இழந்து, மோல்டிங், பாலிஷ் போன்ற சின்ன தொழில்களை நடத்துகின்றவர்கள் வேறு ஒரு கம்பெனியுடன் இணைந்து தொழிலை நடத்திக்கொண்டு இருப்பார்கள். இந்த கொரோனா பாதிப்பினால் இவர்கள் செய்த பணிக்கு அந்த கம்பெனிகளால் இவர்களுக்கு பணம் கொடுக்க முடியவில்லை. யார் யார் தயாரித்து அல்லது வேலை செய்து ஒரு கம்பெனிக்கு கொடுத்து இருக்கின்றார்களோ, அந்த இன்வாய்சில் நான் இவ்வளவு பொருள் பெற்றுகொண்டேன், இவ்வளவு பாக்கி என்று சொல்லி அவர்களுக்கு கொடுக்க வேண்டிய பணம் என்று முத்திரை பதித்து கொடுத்தால், அவர்களுக்கு அந்த வேலைக்கான பணத்தை அருகிலே இருக்கின்ற தேசிய மயமாக்கபட்ட வங்கி இந்த சிறு குறு தொழிலாளர்களுக்கு கொடுத்துவிட்டு அந்த பணத்தை யார் வாங்கினார்களோ அவர்களிடம் இரண்டு முன்று மாதங்களாக பெற்றுக்கொண்டால் மொத்தமாக வாங்கியவர்களும் தொழிலை செய்யலாம், சிறு குறு தொழிலாளர்களுக்கும் வாழ்வாதாரம் கிடைத்தது போல் ஆகும். இதை மத்திய அரசாங்கம் உடனடியாக செய்தால் ஓரளவு இந்த தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் சிறு முதலாளிகளும் சந்தோஷமடைவார்கள்.

அதே போல் குறிப்பாக 5 பேர் 10 பேரை வைத்து சின்ன தொழிற்சாலை வைத்து இருப்பவர்கள், அவர்கள் இந்த காலகட்டத்தில் சம்பளம் கொடுக்க முடியாமல் சிரமத்தில் இருகின்றார்கள். எனவே மத்திய அரசாங்கம் வெளிநாட்டில் இருப்பது போல் 5 பேர் 10 பேரைக் கொண்டு சின்ன தொழிற்சாலை இயங்கினால் அவர்களுக்கான சம்பளத்தை அரசாங்கமே கொடுத்துவிட வேண்டும். அப்படி கொடுத்தால் தொழிற்சாலைகள் இயங்கும். பணம் வர வர அவர்கள் வங்கியில் செலுத்தி விடுவார்கள் இது அரசாங்கம் கடனாக கொடுக்கவில்லை, முன்பணமாக கொடுக்கின்றார்கள். இந்த திட்டத்தை நாம் இந்தியாவில் கொண்டு வந்தால் சிறு குறு தொழில்களை பாதுகாக்க வசதியாக இருக்கும்.

மேலும் தமிழக முதல்வர் அவர்கள் இந்த ஊரடங்கு 3-ம் தேதிக்கு மேல் கிடையாது அல்லது இந்த சட்டத்திற்கு உட்பட்டு வியாபாரிகளும், தொழிற்சாலைகளும் இயங்கலாம் என்ற உத்தரவை தர வேண்டும். சென்னையில் அதிகமாக கொரோனா தாக்கம் இருப்பதால் சென்னை நகரத்தை தவிர்த்து விட்டு இந்த கொரோனா தடுப்பு சட்டத்தை நீக்கலாம் என்ற முடிவை எடுக்க வேண்டும் அதற்கு தமிழக அரசு உத்தரவிடவேண்டும்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!