வரும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க 96.88 கோடி பேர் தகுதி!- இந்திய தேர்தல் ஆணையம்..

வரும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க 96.88 கோடி பேர் தகுதி!- இந்திய தேர்தல் ஆணையம்..

மக்களவைத் தோ்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முழுவீச்சில் தயாராகி வருகிறது. வரும் தோ்தலில் நாடு முழுவதும் 12 லட்சத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. 1.5 கோடி தோ்தல் பணியாளா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 91.20 கோடி போ் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனா்.

இந்த எண்ணிக்கை 6% அதிகரித்து வரும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க 96.88 கோடி பேர் தகுதி பெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதில், நாடு முழுவதும் 2.53 கோடி புதிய வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதிப் பெற்றுள்ளனர்.

மேலும் ஆண் வாக்காளர்கள் 49.72 கோடியும், பெண் வாக்காளர்கள் 47.15 கோடியும், மாற்றுத்திறனாளிகள் 88.35 லட்ச ம் பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 48,044 பேரும் வாக்களிக்க தகுதிப் பெற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!