இராஜசிங்கமங்கலத்தில் பூங்கா அமையுமா? சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் கூறியதாவது:இராஜசிங்கமங்கலம் பேரூராட்சியில் ஏராளமான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இங்கு சிறுவர்கள் விளையாடுவதற்கோ , இளைஞர்கள் உடற்பயிற்சி செய்வதற்கோ, வயதானவர்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்கென ஒரு பூங்கா கூட இங்கு இல்லை.இராஜசிங்கமங்கலத்தில் பூங்கா அமைத்து தர வேண்டி முதலமைச்சரின் தனிபிரிவு மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு பதிவு கொடுக்கப்பட்டுள்ளது.இராமநாதபுரம் மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் இராஜசிங்கமங்கலமும் ஒன்று,தற்பொழுது தாலுவாகவும் இருக்கிறது. ஆனால் ஒரு பூங்கா கூட இல்லாமல் இருப்பது வேதனையளிக்கிறது .நமது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும், மன அழுத்தம் குறைவதற்கும் பூங்கா போன்ற இடங்கள் சமூகத்திற்கு அவசியமாகிறது.மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகள் இதனை கருத்தில் கொண்டு விரைவில் பூங்கா அமைக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோரிக்கை மனுவின் தற்போதைய நிலவரம்:

இராஜசிங்கமங்கலம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசுக்கு சொந்தமான பொது இடங்கள் இல்லாத காரணத்தால் சிறுவர் பூங்கா மற்றும் நடைபாதை அமைக்க வாய்ப்பு இல்லை. மேலும் அரசுக்கு சொந்தமான இடங்களை கண்டறிந்து பேரூராட்சிக்கு வழங்க வட்டாட்சியர் அவர்களுக்கு கோரப்பட்டுள்ளது. அவ்வாறு இடங்கள் கிடைக்கப் பெற்றவுடன் சிறுவர் பூங்கா அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மனுதாரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!