தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் இரு சக்கர வாகனம் நிறுத்த கூடாது என்று அறிவிப்பு பலகை கிழிந்த நிலையில் தொங்குவதை காண முடியும். ஆனால் அந்த அறிவிப்பு பலகை ஊனமடைந்த நிலையில் இருப்பதால் யார் கண்ணிலும் படுவதில்லை என்றே தெரிகிறது.
இதனால் எந்த சந்தர்ப்பத்திலும், அவசர வேலைக்கு கூட அலுவலகத்திற்குள் நுழைய முடியாத சூழல். இதனால் அங்கு வேலைகளுக்கு வரும் மாற்று திறனாளிகள் மிகவும்
சிரமத்துக்கு ஆளாகிறார்கள். மேலும் குடிநீர் குழாயை மறித்து வாகனத்தை நிறுத்துவதால் பொது மக்களுக்கும் இடையூறுக்கு ஆளாகிறார்கள். எனவே இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவருடைய கோரிக்கையாக உள்ளது.
A.சாதிக்பாட்சா. நிருபர்.தேனி மாவட்டம்


You must be logged in to post a comment.