கீழக்கரை நகராட்சியில் இடப்பற்றாகுறையை காரணம் காட்டி பொதுமக்களுக்கு பொது பூங்கா இல்லாமலே இருந்து வந்தது. இந்நிலையில் அரசு பூங்கா மற்றும் அகலமான பாதைகள் போன்ற சில விதிகளின் பேரில் பிளாட் போட நகராட்சி அனுமதி அளித்துள்ளது. அதைத் தொடர்ந்து கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட 3இடங்களில் நகராட்சி சார்பாக பூங்கா வர உள்ளதை பொதுமக்கள் அறியும் வண்ணம் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
அதே போல் பள்ளி மாணவர்கள் விளையாட மைதானம் ஏதும் கீழக்கரையில் இல்லை என்ற மனக்குறையும் எல்லோர் மனதிலும் உள்ளது. இதைப் பற்றி பல ஆர்வலர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். இதையும் அரசாங்கம் கருத்தில் கொண்டு மக்கள் பயன் பெறும் வண்ணம் விளையாட்டு மைதானம் ஏற்படுத்த வேண்டும் என மக்கள் டீம் அமைப்பும் கோரிக்கை கீழக்கரை ஆணையருக்கு வைத்துள்ளது.
தகவல்: மக்கள் டீம் :




அதிவிரைவில் 2180 ல் வரும்