இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கலையூர் கருமலையான் கோயிலில் பேய்விரட்டு திருவிழா நடந்தது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இத்திருவிழா இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதையொட்டி காட்டு சீமை கருவேல மரத்தில் புதிதாக செய்யப்பட்ட கழுமரத்தை கோயிலுக்குள் வைக்கும் வைபவம் நடந்து விடிய, விடிய சிறப்பு பூஜைகள் விடிய விடிய நடைபெற்றது.
மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து தங்கி ஆயிரக்கணக்கான ஆடுகளை பலியிட்டு வழிபட்டனர் . தொடர்ந்து பேய் பிடித்ததாக நம்பியவர்களுக்கு சாமியாடிகர் திருநீர் பூசி பேய் விரட்டினர்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.


You must be logged in to post a comment.