பரமக்குடியில் பாதுகாப்பு பணியில் இருந்த போது மின்சாரம் தாக்கி பலியான சார்பு ஆய்வாளர் உடலுக்கு ADGP டேவிட்சன் தேவாசீர்வாதம் நேரில் அஞ்சலி..
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை பாதுகாப்பின் போது பிளக்ஸ் பேனரை அகற்ற முயன்ற போது மின் டிரான்ஸ்பார்மர் மீது சாய்ந்ததில் பரமக்குடி சார்பு ஆய்வாளர் சரவணன் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கமுதி அருகே உள்ள கே.நெடுங்குளம் கிராமத்தில் அவரது உடலுக்கு தமிழக காவல்துறை ஏடிஜிபி சட்டம் ஒழுங்கு டேவிட்சன் தேவஆசிர்வாதம், தென் மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா, ராமநாதபுரம் DIG அபினவ்குமார், உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்து போலீஸ் மரியாதை உடன் 21 குண்டுகள் முழங்க எரியூட்டப்பட்டது.
இறந்த சார்பு ஆய்வாளர் சரவணனுக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும் 6 வயதில் மகனும், 3 வயதில் பெண் குழந்தையும் உள்ளது.
தீபாவளி திருநாளை தமிழகமெங்கும் மக்கள் சந்தோஷமாக கொண்டாடிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் பரிதாபமாக உயிரிழந்த சரவணன் கிராமமான நெடுங்குல மக்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
உறவினர்கள் கதறி அழுத காட்சி பரிதாபமாக இருந்தது..
You must be logged in to post a comment.