இராஜசிங்கமங்கலம் ஒன்றியம் அண்ணாமலை நகர் ஊரணி கரைகளில் பனைக்காக ஒரு நாள் நிகழ்வு..

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக தாய்மண் திட்டத்தின் கீழ்  பனைக்காக ஒரு நாள் நிகழ்வு இன்று 03-11-2019 இராஜசிங்கமங்கலம் ஒன்றியம் அண்ணாமலை நகர் ஊரணி கரைகளில் மேற்கொள்ளப்பட்டது.

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை துணை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் தலைமை தாங்கி பனை விதை விதைப்பு திருவிழாவை தொடங்கி வைத்தார். மேலும் பனை சார்ந்த பொருளாதாரம் பற்றியும், நமது மாவட்டத்தில் பனை மரங்கள் அழிக்கப்பட்டு வரும் நிலையில் அதை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை பற்றியும் எடுத்துரைத்தார்.

இராஜசிங்கமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர் ஆசிரியர் பாதுஷா முன்னிலை வகித்து நெகிழியின் தீமைகள் பற்றியும், குளங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அண்ணாமலை நகர் ஊரணியைச் சுற்றியுள்ள சீமை கருவேல மரங்கள் சிலவற்றையும், நெகிழிகளையும் சுத்தம் செய்து பின்னர் பனை விதைகள் விதைக்கப்பட்டன.

அண்ணாமலை நகரைச் சேர்ந்த இளைஞர்கள் ஆசிரியர் சுரேஷ், ஆரம்ப சுகாதார நிலைய அவசர ஓட்டுநர் விஸ்வநாதன், பாலராம்கி, பால முரளி, தர்மா, தினேஷ், சங்கர், மதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!