பளூஊரணி தார் சாலை வேலை மற்றும் வெளிநாட்டு பறவை வருகை.

கீழக்கரை பளூஊரணி அப்பகுதி ஏழை எளிய மக்கள் முதல் அனைத்து மக்களும் விரும்பி செல்லக்கூடிய பிரபல்யமான சுற்றுலா தளமாக இருந்தது.  ஆனால் கடந்த காலங்களில் சரியான பருவ மழை இல்லாத காரணத்தாலும், ஊரணியும் சரியான முறையில் தூர் வாரப்படாமல், பராமரிக்க படாமல் இருந்ததால் மக்களின் வரத்து குறைந்தது.

இந்த வருட சீசனில் பெய்த நல்ல மழையால் ஊர்ணியில் நீரும் ஓரளவு நிறைந்துள்ளது. அதுபோல் வெளிநாட்டு பறவைகளும் இந்த ஊரணியை நோக்கி வர தொடங்கியிருப்பது வருபவர்களின் கண்களுக்கு குளிர்ச்சியை தருகிறது.

மேலும் மிகவும் பழுதடைந்து இருந்த இப்பகுதிக்கு செல்லும் சாலைக்கும், புதிய தார் சாலை மிக ஜரூராக போடப்படுகிறது. இச்சாலை மழைக்கு கருத்து போகாமல் மக்களுக்கு நீண்ட காலம் உபயோகப்படும் வகையில் இருக்க வேண்டும் என்பது மக்களின் விருப்பம்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!