அரியவகை பல்லிகளை பாதுகாக்க தேசியப் பூங்காவை மூட முடிவு..

அரிய வகை பல்லிகளை பாதுகாக்க, சுற்றுலாத் தளமாக இயங்கி வரும் தேசியப் பூங்காவை மூட இந்தோனேசியா அரசு முடிவு செய்துள்ளது.இந்தோனேசியாவின் சுந்தா, கொமோடோ, படார், ரின்கா ஆகிய பெரிய தீவுகளையும், 26 சிறிய தீவுகளையும் உள்ளடக்கிய 1,733 சதுர கிமீ பரப்பளவில், கொமோடோ தேசியப் பூங்கா அமைந்துள்ளது.கொமோடா டிராகன் எனும் அரிய வகை பல்லிகளை பாதுகாக்க கடந்த 1980ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த பூங்கா, பின்னர் கடல் வாழ் உயிரினங்கள் உட்பட மற்ற உயிரினங்களை பாதுகாக்கத் தொடங்கியது.இதையடுத்து, 1991ம் ஆண்டு இப்பூங்கா யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது. இந்த பூங்காவிற்கு தினசரி லட்சக் கணக்கில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது வழக்கம்.இந்நிலையில், இங்கு வாழும் அரிய வகை பல்லிகளை பாதுகாக்க, கொமோடோ தேசிய பூங்காவை அடுத்த ஆண்டு முதல் மூட இந்தோனேசியா அரசு முடிவெடுத்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து இந்தோனேசியா அதிகாரி ஒருவர் கூறுகையில், “அழிவின் விளிம்பில் இருக்கும் கொமோடோக்களை பாதுகாக்க நாங்கள் நிச்சயம் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுதான் ஆக வேண்டும். பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள், இந்த டிராகன்களின் வாழ்வியல் முறை குறித்து அறியவே வருகின்றனர்.எனவே, ஒரு வருடத்திற்கு பிறகு திறக்கலாம் என முடிவெடுத்துள்ளோம். மேலும், சுற்றுலாப் பயணிகளை அளவுடன் பூங்காவிற்குள் அனுமதிக்கவும் திட்டமிட்டுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!