பள்ளப்பட்டியில் சாக்கடைகள் மற்றும் சாலைகளை அமைத்து தரக் கோரி SDPI கட்சியின் சார்பில் நூதன கவன ஈர்ப்பு போராட்டம்!
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி நகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 23,24, பகுதிகளில் பல வருடங்களாக சாலைகளும் சாக்கடைகளும் மோசமான நிலையில் இருப்பதைக் கண்டு கொள்ளாமல் இருக்கும் பள்ளப்பட்டி நகராட்சி நிர்வாகத்தை
கண்டித்து பள்ளபட்டி நகரம் எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக சார்பாக பழுதடைந்த சாலையில் உருவ பொம்மை உருட்டும் போராட்டம்
இன்று 22-01-2024 மாலை 4.30 மணிஅளவில்
எஸ்டிபிஐ கட்சியின் கரூர் மாவட்ட துணை தலைவர் ஜாபர் சாதிக் அவர்கள் முன்னிலையில் எஸ்டிபிஐ கட்சியின் பள்ளபட்டி நகர தலைவர் மாலிக்தீன் தலைமையில்
உருவ பொம்மை உருட்டும் போராட்டம் நடைபெற்றது,
இந்த போராட்டத்தில்
பள்ளபட்டி நகர துணைத் தலைவர் காஜா முஹைதீன் பள்ளப்பட்டி நகரச் செயலாளர் முகமது அனிபா பள்ளப்பட்டி நகர பொருளாளர் சேக்பரித்
மேற்கு கிளை செயலாளர் மன்சூர் அலி
கிழக்கு கிளை செயலாளர் காதர் அலி, லிங்கமாநாயக்கன் பட்டி மூன்றாவது வார்டு கவுன்சிலர் சேக்பரித் லிங்கமாநாயக்கன் பட்டி கிளை தலைவர் முஸ்தபா மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் செயல் வீரர்கள் உறுப்பினர்கள் பொதுமக்களும் பழுதடைந்த சாலையில் உருவ பொம்மை உருட்டும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









