பாலக்கோட்டில் போக்குவரத்திற்க்கு இடையூறாக உள்ள சாலையோர ஆக்கிரமைப்பு மற்றும் நடைபாதை ஆக்கிரமைபுகளை அகற்ற பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையத்திற்க்கு தினந்தோறும் 300க்கும் மேற்பட்ட உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிமாநில பேருந்துகள் வந்து செல்லுகின்றனர். இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் இடத்தில் காய்கறி கடை, வளையல் கடை, வெற்றிலை கடை, பூ கடை, செருப்பு கடை, இருசக்கர வாகனம் என நடைபாதை பகுதியை ஆக்கிரமைத்து  தள்ளுவண்டி கடை முதல் காய்கறி கடைவரை பேருந்து நிலையத்தில் சட்ட விரோதமாக நடைபாதையிலும்,  பயணிகள் அமரும் பளிங்குசுவர்கள் மீது கடைகள் அமைக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் தரையிலும், நீண்ட நேரம் நின்றபடியே பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.பயணிகள் அமர இடம் கேட்டால் நடைபாதை வியாபாரிகள் அலட்ச்சியமாக பதில் அளிப்பதாகவும், தகாத வார்தையால் திட்டுவதாகவும் இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்து அலட்ச்சிய போக்கினாலும் இதில் சில அதிகாரிகள் குறிப்பிட்ட தொகையை பெற்றுக்கொண்டு கண்டும் காணாமல் செல்லுவதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.இதில் காலை மற்றும் மாலை வேலையில் பள்ளி கல்லூரி வாகனங்கள் கனரக வாகனங்கள், தனியார் பேருந்துகள், அரசு பேருந்துகள், ஒருவழி பாதையில் செல்லாமல் நகருக்குள்ளே வருவதால் போக்குவரத்திற்க்கு நெரிசல் ஏற்பட்டு வருகின்றது. பஸ்நிலையத்திற்கு எதிரில் வாகனத்தை நிறுத்துவதும், சாலையின் நடுவே நிறுத்தி மாணவ, மாணவிகளை இறக்குவதால் பின்நோக்கி வரும் வாகனங்கள் ஒன்றின் பின் ஒன்றாக அணி வகுத்து நிற்கும் சூழல் உருவாகுகின்றது. இதனால் கடும் போக்குவரத்து நெரில் ஏற்படுவது மட்டுமின்றி அவரச தேவைக்கு ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலையில் உள்ளது.மேலும் நகரத்தில் தக்காளிமார்கெட் முதல் காவல்நிலையம் வரை உள்ள நெடுஞ்சாலையையோரம் ஆக்கிரமிப்பு செய்து வியாபாரம் செய்து வருவதால் போக்குவரத்திற்க்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.எனவே மாவட்ட நிர்வாகம் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பாலக்கோடு நகரபகுதியில் உள்ள நெடுஞ்சாலையோர ஆக்கிரமைப்பை அகற்றவும், பேருந்து நிலையத்தில் நடைபாதை ஆக்கிரமைபை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!