பாலக்கோட்டில் ஸ்ரீ ஞானவேல் முருகன் சுவாமி திருவீதி உலா

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அண்ணா நகர் ஸ்ரீ ஞானவேல் முருகன் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இப்பகுதி மக்கள் வருடம் தோறும் ஆடி மாதம் 18-ஆம் நாள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்து பாலக்கோடு நகர் முழுவதும் வீதி உலா வருவது வழக்கம். இந்த ஆண்டு காலை 4 மணி முதலே சாமிக்கு பல்வேறு திரவியங்களான  பால் அபிஷேகம் நெய்யபிஷேகம் என பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சுவாமிக்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு பின்பு தீபாராதனை காட்டப்பட்டது.
இதையடுத்து சுற்றுவட்டார பகுதியில் இருந்து பொதுமக்கள் காலை முதலே நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து சுவாமி வீதி உலா நகரத்தின் முக்கிய பகுதியான அண்ணாநகர்,  வட்டார வளர்ச்சி அலுவலகம், பேருந்து நிலையம், தேர்முட்டி வழியாக சுவாமி வீதி உலா நடைபெற்றது இதையடுத்து வீதி உலாவில் பக்தர்கள் காவடி எடுத்து நடனமாடி பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். இதையடுத்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை பாலக்கோடு பனங்காடு ஊர் கவுண்டர் குடும்ப வகையறா பல்லிகவுண்டர் குடும்பத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!