பழனி பேருந்து நிலையத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு திருடர்களை தட்டி தூக்கிய போலீசார்..
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் நிலையில் பழனி பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் பயணிகளிடம் குறி வைத்து பிக்பாக்கெட் திருடர்கள் வழிப்பறியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து அடிக்கடி பழனி காவல் நிலையத்திற்கு பக்தர்கள் புகார் கொடுத்த வண்ணம் இருந்த நிலையில் டிஎஸ்பி தனஞ்ஜெயன் உத்தரவின் பேரில் நகர காவல் ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் பேருந்து நிலையம் பகுதியில் அதிகாரிகள் தொடர்ச்சியாக ரோந்து செய்து வருகின்றனர்.இந்நிலையில்
திருப்பூர் மடத்துக்குளத்தை சேர்ந்த விமல்,கோகுல், ஈஸ்வர பாண்டியன் ஆகிய மூன்று பேரும் பழனி பேருந்து நிலையத்தில் இருந்து தாராபுரம் செல்வதற்கு பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தனர்.அது சமயம் அருகில் இருந்த பழனி ஜகவர் நகரை சேர்ந்த சக்திவேல் , அஜித் குமார் என்பவர்கள் பணத்தை பறித்துக் கொண்டு ஓடியுள்ளனர். தப்பியோடிய இருவரையும் பழனி நகர போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் பேருந்து நிலையத்தில் அடிக்கடி பிக்பாக்கெட்டில் ஈடுபட்டு வருவது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து இருவரையும்
சிறையில் அடைத்தனர். இதுபோல் பிக்பாக்கெட் அடிக்கும் நபர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். பிக்பாக்கெட் அடித்த நபர்களை கைது செய்த நகர காவல் நிலைய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்..
You must be logged in to post a comment.