பிரபல செயின் பறிப்பு திருடனை மடக்கி பிடித்த பழனி காவல்துறையினர்..
மதுரையை சேர்ந்த கவாஸ்கர்(35) என்ற நபர் சில நாட்களுக்கு முன்பு பழனியில் செயின் பறிப்பில் ஈடுபட்டார்.
பழநி சிவகிரி பட்டி அருகே வாகன சோதனையில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் சார்பு ஆய்வாளர்கள் விஜய் மூர்த்தி, தங்கராஜ், காவலர்கள் ஆகியோர் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது வேகமாக பைக்கில் வந்த கவாஸ்கரரை காவலர்கள் நிறுத்த முயன்றனர். அப்போது வாகனத்தை நிறுத்த முடியாமல் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டது.
உடனே அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதல் உதவி செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.