பழனி முருகன் கோவிலில் 296 பணியிடங்களுக்கு 1 லட்சம் பேர் விண்ணப்பம்!
திண்டுக்கல்,பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் மற்றும் அதன் உபகோவில்கள், கல்வி நிறுவனங்களில் காலியாக உள்ள 296 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டது.
இதனையடுத்து இளைஞர்கள், இளம்பெண்கள் நேரடியாகவும், தபால் மூலமாகவும் விண்ணப்பங்கள அளித்தனர். நேற்று விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால் ஏராளமானோர் விண்ணப்பம் செய்தனர்.
இதுகுறித்து கோவில் அதிகாரிகள் கூறும்போது, இதுவரை சுமார் 1 லட்சம் விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன என்றனர்.
You must be logged in to post a comment.